ஆறு மாதங்கள் ஆகியும் வளர்ச்சிப் பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லை - வால்பாறை நகர மன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

இன்று வால்பாறையில் நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சீரமைத்தல், யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் மற்றும் நகர பகுதியில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த கோரிக்கைகள் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணை தலைவர் செந்தில் நகராட்சி ஆணையாளர் பாலு தலைமையில் இன்று நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 21 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக நீண்ட நாளாக கிடப்பில் இருந்த முடிஸ் சாலையை புதுப்பிக்க வேலை துவங்கியதையடுத்து நகரமன்ற கூட்டத்தில் அதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்க துவங்கி உள்ளதால், தெருவிளக்குகள் வருத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இது குறித்து பேசிய நகராட்சி உறுப்பினர்கள் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்து உள்ளதையும் அதனுடன் தெரு விளக்கு பற்றாக்குறை நிலவி வருவதையும் சுட்டிக் காட்டினர்.



மேலும், தெருவிளக்கு பிரச்சினை குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே நகர்மன்ற கூட்டத்தில் பேசி உள்ளதாக தெரிவித்த உறுப்பினர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். எனவே, உடனடியாக அனைத்து எஸ்டேட் பகுதிகளில் தெருவிளக்கு பிரச்சனை தீர்த்து வைக்க கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பேசிய 15- வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஆறு மாதங்கள் ஆகியும் 21 வார்டுகளிலும் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. வால்பாறை நகராட்சி ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா ? என்ற சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டை நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்க காத்திருப்பதாகவும், விரைவில் அனுமதி பெற்று பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

இதையடுத்து பேசிய 21 வது வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரி, "தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் மூட உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. சிங்கோனா பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், எஸ்டேட் பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு தெருவிளக்கு அமைக்க வேண்டும். யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, யானைக் கூட்டம் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார்.



இதையடுத்து, 9 வார்டு உறுப்பினர், மகுடேஷ்வரான் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் அம்பேத்கார் சிலை நகர் பகுதியில் வைப்பதற்கு நகர மன்றதில் ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...