பொள்ளாச்சியில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை - கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியில் மைதீன் என்ற 20 வயது இளைஞர் அதே பகுதியில் உள்ள மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோவை மகிலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மூதாட்டியை பலாத்காரம் செய்தவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 500 ரூபாய் அபராதம் வைத்து கோவை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மைதீன் (20), என்பவர் கடந்த 10.11.2020 -ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த குற்றத்திற்காக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரால் மைதீன் (20) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை கோவை மாவட்டம் கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று (30.09.2022) மைதீனுக்கு மகிலா கோர்ட் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதமாக விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் (1518) பச்சண்ணன் ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...