கடந்த 2017 ஆம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி கொடநாடு எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடந்து வருகிறது.
இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தனிப்படையினரும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சம்சீர் அலி, மனோஜ்சாமி மற்றும் அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது.
வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் வழக்கு விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.