துடியலூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை - ஆர்டிஓ விசாரணை..!

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான மனைவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: துடியலூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுப்பெண், குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சீதா லட்சுமி (27). இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே குழந்தை இல்லை என்பதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவக்குமார் வேலைக்கு சென்று விட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சீதா லட்சுமி உணவு சமைக்காமல் செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்தார். இதுகுறித்து சிவக்குமார் கேட்டபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து சிவக்குமார் தனது மனைவியிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, கணவருடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலுக்கு ஆளான சீதா லட்சுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் வீட்டிற்கு திரும்பிய சிவக்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சீதா லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருமணமான ஒன்றரை ஆண்டில் சீதா லட்சுமி தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக அப்பகுதியில் உள்ளவர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...