கோவையில் உள்ள நீர்த்தேக்கங்களின் மதகுகளை சரிபார்க்க வேண்டும் - ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் பேசிய விவசாய சங்கத்தினர், கோவையில் உள்ள நீர்த்தேக்கங்களின் மதகுகளை சரிபார்த்து, ஷட்டர்களை சீரமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நீர்தேக்க பகுதிகளில் உள்ள மதகுகளை சரிபார்க்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியர் சமீரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.



இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கினர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் பல்வேறு நீர் தேக்கப் பகுதிகளில் உள்ள மதகுகள் சரிபார்க்கப்பட வேண்டும். பல்வேறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள மதகுகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. மேலும் மதகுகளில் ஷட்டர்களையும் பழுது பார்க்கப்பட வேண்டும்.

பரம்பிக்குளம், ஆழியார் போன்ற நீர்த்தேக்கங்களில் உள்ள ஷட்டர் விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும். நீர் ஆதாரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் நெல் உற்பத்தி செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,805 ஆக உள்ளது. கேரளாவில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2820 என கேரளா அரசு தற்சமயம் அறிவித்துள்ளது. அதே போல் தமிழகத்தில் நெல் விவசாயிகளுக்கு ரூ.2820 வழங்கப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் கிராம பொது பாதைகளில் ஓரமாக பயன்படுத்தாத கிணறுகள், விவசாயத்துக்கு பயனுள்ள கிணறுகள் உள்ளன. குறிப்பாக காரமடை ஒன்றியம், தொண்டாமுத்தூர், புத்தூர், தேவராயம்பாளையம் செல்லும் வழியில் உள்ள கிணறுகள் பாதுகாப்பாக இல்லாததால் சாலை விபத்துகள் ஏற்படுகிறது.

அரசு உடனடியாக சாலையோரம் உள்ள கிணறுகளை சுற்றி பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க வேண்டும். தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க "பசுமை தமிழகம் இயக்கம்" கோவைக்கு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...