வால்பாறை அருகே வீடு மற்றும் நியாயவிலை கடையை உடைத்து சேதப்படுத்தி ஒற்றை காட்டு யானை அட்டகாசம்..!

ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த ரேஷன் கடை, வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்திய நிலையில் தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை அங்கிருந்து விரட்டியடித்தனர்.


கோவை: வால்பாறை அருகேயுள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் நேற்றிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த நியாயவிலை கடை, வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன.

அவ்வாறு குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் யானைகள், அங்குள்ள வீடுகள், நியாய விலை கடைகள் மற்றும் பள்ளி சத்துணவு மையம் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி வருவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வால்பாறை அருகேயுள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நேற்றிரவு நுழைந்த ஒற்றை காட்டு யானை, அங்குள்ள நியாய விலை கடையை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு போன்றவைகளை சாப்பிட்டு சேதப்படுத்தியுள்ளது.



மேலும், அங்கிருந்த வீடுகளுக்கு சென்ற அந்த ஒற்றை காட்டுயானை அழகு ராஜ் என்பவரது வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் வீட்டிற்கு வெளியே இருந்த இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை உடைத்து தூக்கி வீசியுள்ளது.



இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், யானையை அப்பகுதியில் இருந்து விரட்டியடித்தனர்.



இந்நிலையில், காட்டு யானையின் அட்டகாசம் குறித்து அறிந்த நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் வார்டு உறுப்பினர் ஜெ.பாஸ்கர் உள்ளிட்டோர் சேதமடைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், யானைகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வருவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...