சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஆய்வு மேற்கொண்ட ஏர் மார்ஷல் விபாஷ் பாண்டேவுக்கு, மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் பாரத் ஆகிய திட்டங்களின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களை பயன்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
கோவை: சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஏர் மார்ஷல் விபாஷ் பாண்டே இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானப்படை தளத்தை ஏர் மார்ஷல் விபாஷ் பாண்டே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு விமானப் படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், விமானப் படை தளத்தின் பழுதுபார்ப்பு மையத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.
அப்போது, மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் பாரத் ஆகிய திட்டங்களின் கீழ் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்களை தவிர்த்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களை பயன்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.