கோவை பாரதியார் பல்கலை., வளாகத்தில் புகுந்த யானை கூட்டம் ..!

மருதமலை சாலையில் உள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை யானை கூட்டம் ஒன்று புகுந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டு யானைகள் கூட்டமாக வந்ததால் அச்சமடைந்த மாணவ - மாணவிகள் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள மருதமலை வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்த காட்டு யானைகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துவதும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரமும் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் குடியிருப்புகள் புகுந்து, அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தியது.

இதனிடையே நேற்று (29.09.2022) பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புற வளாகத்துக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர், உடனடியாகவனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வனத்துறையினர் விரட்டும் போதுகாட்டு யானை கூட்டம் திடீரெனபல்கலைகழக வளாகத்துக்குள்ளே மீண்டும் வந்ததால் அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில், காட்டு யானைகள்அங்கும் இங்குமாக ஓடியதால், யானை கூட்டம் வனத்துக்குள் செல்லும்வரைவனத்துறையினர் காத்திருந்தனர்.

மேலும் காட்டு யானைகள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பாரதியார் பல்கலைக்கழக அருகே முகாமிட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, நேற்று இரவு காட்டு யானைகளை வனத்துறையினர், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து காட்டு பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதி பெரும் பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...