கோத்தகிரி அடுத்த கரிக்கையூர் இருளர் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த காளியம்மாள், மூலிகைகளை கொண்டு 100க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மூலிகை இலை, வேர்கள் கொண்டு சிகிச்சை அளித்துள்ளார் என்பதை அங்கீகரித்து பெங்களூருவில் நடந்த மாநாட்டில் அவருக்கு "தன் வந்திரி" விருது வழங்கப்பட்டது.
நீலகிரி: கோத்தகிரி அடுத்த கரிக்கையூர் இருளர் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (60). இவர் அப்பகுதியில் மூலிகைகளை கொண்டு, அங்குள்ள மக்களுக்கு சிகிச்சையளித்து குணப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கடந்த 25ஆம் தேதி "ஆயுர்வேதா பார்வை 2047" என்ற தலைப்பில், பல்துறை சுகாதார விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்லைக்கழகம் சார்பில், தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், நீலகிரி பழங்குடியின கிராமங்களில் மருத்துவ சேவையாற்றி வரும் காளியம்மாள், அப்பகுதியில் உள்ள பச்சிலை, வேர் உள்ளிட்ட மூலிகை வாயிலாக, பக்க விளைவு இல்லாத, 100க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளார் என்பது குறித்து, ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, மத்திய கலாசாரத்துறை சார்பில் டாக்டர் மூர்த்தி மற்றும், நிகழ்ச்சி குழு தலைவர் டாக்டர் ஹரிராமமூர்த்தி ஆகியோர் காளியம்மாளுக்கு 'தன் வந்திரி' என்ற தேசிய அளவிலான விருதை வழங்கினர்.
இதுகுறித்து, ஆதிவாசி சங்க செயலாளர் ஆல்வாஸ் கூறியதாவது,"இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த காளியம்மாள், கடந்த 8 ஆண்டுகளாக எங்கள் சங்கத்துடன் இணைந்து, பல்வேறு நோய்களை குணப்படுத்தும் பாரம்பரிய மருந்துகள் கண்டுபிடித்துள்ளார். இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது, நீலகிரி மக்களுக்கு பெருமை", இவ்வாறு அவர் கூறினார்.