தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இளம் அறிவியல் பட்டப்படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு - 7 பேர் 200க்கு 200 மதிப்பெண்

பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். அதில், 200 க்கு 200க்கு மதிப்பெண்களை 7 பேர், 199.5 மதிப்பெண்களை 14 பேரும், 199 மதிப்பெண்களை 3 பேர் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார்.



கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்லைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள், 14 அரசு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதற்கு 2022-23ம் கல்வியாண்டில் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

நடப்பாண்டில், வேளாண் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 148 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 337 இடங்களும் உள்ளன. இதற்கு மொத்தம் 37 ஆயிரத்து 766 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில், வெளிமாநிலத்தை சேர்ந்த 800 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். அதில், 200 க்கு 200க்கு மதிப்பெண்களை7 பேர் பெற்றுள்ளனர்.199.5 மதிப்பெண்கள்- 14 பேர். 199 மதிப்பெண்கள் - 3 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.கோபி, ஆர். சுபஸ்ரீ, கார்த்திக் ராஜா, தாரணி செங்கோட்டவேலு, முத்துபாண்டி, ஹரிணிகா., ராஜா ஐஸ்வரியா காமாட்சி ஆகிய 7 பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.



ஆன்லைன் கலந்தாய்வு மருத்துவ கலந்தாய்வு முடிந்த பின்பு நடத்தப்படும் என்றும் ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக நேரில் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...