கூடலூரில் மழையினால் சேதமடைந்த சாலைகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மழையினால் சேதமடைந்த கூடலூர் - சுல்தான் பத்தேரி மற்றும் கூடலூர் - உதகை சாலைகளை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் போடப்பட்டிருக்கும் சாலைகளின் தரத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் மழையினால் சேதமடைந்த சாலைகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, கூடலூர் - சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட பகுதியில் புதிய தொழில் நுட்ப முறையை கொண்டு, மண் ஆணிகளை பொருத்த திட்டமிட வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.



அதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை சாலையில் ஏற்பட்ட விரிசல்களை ஆய்வு செய்த அமைச்சர் உதகை-கூடலூர் சாலை தலைக்குந்தா பகுதியில் அமைக்கப்பட்ட சாலையின் தடிமன் மற்றும் சமமான நிலையில் சாலை உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, தலைக்குந்தா பகுதியில் மரக்கன்றுகளை அமைச்சர் ஏ.வ.வேலு நடவு செய்தார்.



ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், தலைமைப் பொறியாளர்கள் பாலமுருகன் (தேசிய நெடுஞ்சாலை), சந்திரசேகரன் (நெடுஞ்சாலை), கண்காணிப்பு பொறியாளர்கள் சரவணன், கண்ணன், கோட்டப்பொறியாளர்கள், முன்னாள் அரசு கொறடா முபாரக், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...