குன்னூரில் ஹோம் மேட் சாக்லேட்டுகளை ருசி பார்த்த கரடி...!

குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள சாக்லேட் பேக்டரிக்குள் கரடி ஒன்று புகுந்து அங்கு தயாரித்து வைக்கப்பட்டுள்ள சாக்லேட்டுகளை உண்டு செல்வது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள தனியார் ஹாேம் மேட் சாக்லேட் (HOME MADE CHOCALATE) தயாரிக்கும் பேக்டரிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த சாக்லெட்களை உண்டு செல்வது தொழிற்சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள ஹை பீல்டு பகுதியில் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி, ஒன்று சாக்லெட் தொழிற்சாலையின் கதவை உடைக்க முயற்சிக்கிறது.



அது திறக்காததால் அருகில் இருந்த வேறு வழியாக தடுப்பு சுவர் மீது ஏறி தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருநத சாக்லெட்களை உண்டுவிட்டு சென்றுள்ளது.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மீண்டும் தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

இதனால் இப்பகுதியில் அடிக்கடி உலா வரும் கரடி மற்றும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...