கோவை 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு - எஸ்.டி.பி.ஐ சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கைது…!

துடியலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான முகமது ரஃபீக் (31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் பெட்ரோல் குண்டு வீச வந்த மற்றொரு நபரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட முகமது ரஃபீக்கை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் துடியலூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கடந்த 22 ஆம் தேதி அடுத்தடுத்து பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு மற்றும் கல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை ரத்தினபுரியை சேர்ந்த பாஜக நிர்வாகி மோகன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிகல் கடை 100 அடி சாலையில் அமைந்துள்ளது.



இந்த கடையின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பாஜக நிர்வாகி மோகன் கடைமீது பெட்ரோல் குண்டு வீசிய துடியலூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முகமது ரஃபீக் (31) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

மேலும், விசாரணையில் இவர் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர் என்பதும் இவருடன் பெட்ரோல் குண்டு வீச வந்த மற்றொரு நபரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட முகமது ரஃபீக்கை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...