நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் மீண்டும் தேர்வு - தலைமை கழகம் அறிவிப்பு

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குறித்த பட்டியலில், நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்ட திமுகவின் செயலாளராக பா.மு.முபாரக் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதில், திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், நீலகிரி மாவட்ட திமுகவுக்கு செயலாளர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பா.மு.முபாரக், அவைத்தலைவராக கே.போஜன், துணை செயலாளர்களாக ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி மற்றும் பொருளாளராக நாசர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக இளங்கோவன், ராஜூ, முஸ்தபா, செந்தில் ரங்கராஜன், திராவிட மணி, காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, அமிர்தலிங்கம், காளிதாஸ், மோகன்குமார், செல்வம், வீரபத்திரன், பில்லன், தொரை, சதக்கத்துல்லா, ராஜேந்திரன், கருப்பையா, உதயதேவன், ஷீலா கேத்ரின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், ஊட்டி வடக்கு - காமராஜ், தெற்கு - பரமசிவன், மேலூர் - லாரன்ஸ், கூடலூர் - லியாகத் அலி, பந்தலூர் கிழக்கு - சுஜேஷ், மேற்கு - சிவானந்தராஜா, குன்னூர் - பிரேம்குமார், கோத்தகிரி - நெல்லை கண்ணன், கீழ்கோத்தகிரி - பீமன்.

ஊட்டி - ஜார்ஜ், கூடலூர் - இளஞ்செழியன், நெல்லியாளம் - சேகர் என்ற சேகரன், குன்னூர் - ராமசாமி, நடுவட்டம் - உதயகுமார், சோலூர் - பிரகாஷ்குமார், பிக்கட்டி - நடராஜன், கீழ்குந்தா - சதீஷ்குமார், கேத்தி - சுந்தர்ராஜ்.

அதிகரட்டி - முத்து, தேவர்சோலை - சுப்ரமணி, ஓவேலி - செல்வரத்தினம், உலிக்கல் - ரமேஸ்குமார், ஜெகதளா - சஞ்சீவ்குமார், கோத்தகிரி - பி.காளிதாஸ், கண்டோன்மெண்ட் நகரியம் - மார்ட்டின்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...