பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் - கடிதத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது - எஸ்டிபிஐ கட்சியினர் எஸ்.பியிடம் மனு..!

வேண்டுமென்றே கோவையில் தற்போது உள்ள சூழ்நிலை பயன்படுத்தி வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் மர்ம நபர்கள் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர். மேலும், எஸ்டிபிஐ கட்சி பெயரை வைத்து இந்த கடிதம் பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தில், பொள்ளாச்சி குமரன் நகரில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு, மற்றும் கையெரி குண்டு வீசப்படும் எனவும், சட்டம் ஒழுங்கு பாதுகாத்துக் கொள்ளவும் என்ற கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், சர்ச்சையை கிளப்பும் விதமாக அந்த கடிதத்தில் குமரன் நகர் எஸ்டிபிஐ என குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானதோடு, செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், எஸ்டிபிஐ கோவை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் இக்பால் தலைமையில் எஸ்டிபிஐ கட்சியினர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று விளக்க மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்திற்கும், எஸ்டிபிஐ கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். வேண்டுமென்றே கோவையில் தற்போது உள்ள சூழ்நிலை பயன்படுத்தி வீண் குழப்பத்தை மற்றும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கில் மர்ம நபர்கள் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும், எஸ்டிபிஐ கட்சி பெயரை வைத்து இந்த கடிதம் பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மண்டல தலைவர் ராஜா உசேன், மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் அபுதாஹிர் ஆகியோர் மனு அளிக்க வந்திருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...