உலக இதய தின விழா விழிப்புணர்வு பேரணி - கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தொடங்கி வைத்தார்

உலக இதய தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை டீன் நிர்மலா துவக்கி வைத்த நிலையில், பொதுமக்களுக்கு இதயத்தை காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை: உலக இதய தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான செவிலியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக இதய சம்மேளனத்தால் உருவாக்கப்பட்ட உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்படுகிறது. இதய ஆரோக்கியம் என்பது அனைவருக்குமான அடிப்படை மனித உரிமை. இதய நோய் (CVD) அனைத்து NCD இறப்புகளில் கிட்டத்தட்ட 60% காரணமாக உள்ளது.

இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் இதய நோயால் இறக்கின்றனர். இது உலகளவில் ஏற்படும் இறப்பு விகிதத்தில் ஐந்தில் ஒரு பங்காகும். புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயலற்ற தன்மை போன்ற ஆபத்து காரணிகளாக உள்ளன.

இவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம், குறைந்தபட்சம் 80% இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஏற்படும் முன்கூட்டிய இறப்புகளைத் தவிர்க்க முடியும் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் நடவடிக்கையை இது நோக்கமாகக் கொண்டு உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது.

இணைப்பை பயன்படுத்தி (use heart for every heart) அவரவர் இதயத்தையும், அவர்களின் அன்புக்கு உரியவர்களையும், சமூகத்தையும் காத்து கொள்வதே 2022ஆம் ஆண்டு உலக இதய தினத்தின் நோக்கமாக்கும்.

உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று இதயம் ஆகும். ஏனெனில் இது அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதயக் கோளாறுக்கான அறிகுறிகள் எப்போதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் இது நீண்ட ஆயுளுக்கும் உயிர்வாழ்விற்கும் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளது.

இதய நோய்களைத் தவிர்க்க, ஆரோக்கியமாக இருப்பது, சத்தான உணவைப் பராமரிப்பது மற்றும் மது பழக்கம், புகை பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை தவிர்ப்பது முக்கியம்.



கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய துறை சார்பாக உலக இதய தின விழா நடைபெற்றது.



இதற்காக இதய நோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசிய மருத்துவ கல்லூரி டீன் நிர்மலா, இதய நோயிலிருந்து மக்களை காத்து கொள்வது குறித்து பேசினார்.



பின்னர் (COLS) ஆபத்து காலங்களில் இதயம் துடிப்பின்றி போகும் நிலையில், அதை எப்படி உயிர்ப்பித்துக் கொள்வது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...