கோவையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நேர்ந்த விபரீதம் - பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் மூழ்கி 11ஆம் வகுப்பு மாணவர் பலி..!

ஆலந்துறை அருகே பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் குளிப்பதற்காக நண்பர்கள் இருவருடன் சென்ற 11ஆம் வகுப்பு மாணவர், நவீன்குமார் நீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


கோவை: ஆலந்துறை அருகே பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் மூழ்கி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று பள்ளிக்குச் செல்லாமல் தனது சக நண்பர்கள் 3 பேருடன் ஆலந்துறை அடுத்த பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த நவீன்குமார் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் காப்பாற்ற முடியாததால், மாணவர் முழுவதுமாக நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, நண்பர்கள் அளித்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த ஆலந்துறை போலீசார் மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள், நவீன்குமார் உடலை தேடி வந்தனர்.



இந்நிலையில் நீரிழ் மூழ்கிய நவீன்குமார் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.



இதனையடுத்து நவீன்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடுப்பணையில் குளிக்க சென்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...