இருவேறு இடங்களில் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை - பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரண்..!

சேலம் மற்றும் நாமக்கல்லில் நிதிநிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட குருசாமி என்பவருக்கு இரண்டு வழக்குகளிலும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.


கோவை: நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடியில் ஈடுபட்ட குருசாமி என்பவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சக்தி நகரை சேர்ந்தவர் குருசாமி(40). இவர் சுசி ஈமு பார்ம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், நாமக்கல்லில் நிதி நிறுவனம் ஒன்றைநடத்தி வந்தார்.

இந்த நிதி நிறுவனத்தின் மூலம் 96 பேரிடம் சுமார் 2.39 கோடி ரூபாய் வரைமுதலீடு பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில், நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை 2.40 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல், சேலத்தில் ஈமு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கிலும், கடந்தாண்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்கிலும் தண்டனை அறிவிக்கப்பட்ட போது, குருசாமி நீதிமன்றத்தில்ஆஜராகததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த குருசாமியை, நாமக்கல் மற்றும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இதனிடையே கோவை 'டான்பிட்' நீதிமன்றத்தில் குருசாமி நேற்றைய தினம் (28.09.2022)சரணடைந்தார். இதனையடுத்து அவர் நீதிபதி ரவி உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...