பராமரிப்பில்லாமல் கிடக்கும் வால்பாறை தாவரவியல் பூங்கா - பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு.

வால்பாறை தாவரவியல் பூங்கா பராமரிப்பில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்ததை தொடர்ந்து, பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில், நகர்மன்ற துணை தலைவர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: வால்பாறையில் உள்ள தாவரவியல் பூங்கா புதர்மண்டி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளமின்சாரத்துறை அமைச்சர்செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில்நீண்ட நாட்களாக திறக்கப்படாமல்இருந்த தாவரவியல் பூங்கா சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஒரு புறம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், பூங்காவிற்கு அச்சத்துடன் தான் மக்கள் வந்து செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

புதர்களால் சூழப்பட்ட பூங்கா..!



4.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா, நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி இருந்ததால், பூங்காவிற்கு உள்ளும், வெளியேயும், முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால், பொதுமக்களும், குழந்தைகளும், தாவரவியல் பூங்காவிற்கு அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.



பராமரிப்பு மேற்கொள்ளப்படாததால் பூங்காவிற்குள் பாம்புகள் மற்றும் காட்டு பன்றிகள்நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கும் பொதுமக்கள், பூங்காவில் உள்ள முட்புதர்களை அகற்றி பூங்காவை பராமரிக்க வேண்டும் என தொடர் கோரிக்கையை விடுத்து வந்தனர்.



இந்நிலையில், தொடர் மக்கள் புகாரை அடுத்து பூங்காவை உடனடியாக புனரமைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.

அதன்படி, வால்பாறை நகரமன்ற துணைத் தலைவர் செந்தில் மற்றும் திமுக நகர செயலாளர் சுதாகர் தலைமையில் வால்பாறை நகராட்சி ஆணையர் பாலு மற்றும் 9 வார்டு உறுப்பினர் மகுடிஷ்வரன் நகர துணை செயலாளர்சரவணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள்பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வின் முடிவில்,, பூங்காவிற்குள் இருக்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும்,பூங்காவில் புதிதாகபூஞ்செடிகளும், அழகு செடிகளும் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களின் கோரிக்கை மற்றும் பாதுகாப்பை கருதி பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்மன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...