பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் - மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம்.

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என்று அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என கோவை மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் பாஜக மற்றும்இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல்குண்டு மற்றும் கற்கள் எறிப்பட்டன. மேலும், சில இடங்களில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. தொடர்ந்து, நடைபெற்ற இச்சம்பவங்களால், கோவை மாநகரில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வந்தன.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள், தீவைக்கமுயற்சி செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட, தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ஆறு பேரை மேற்கு காவல் நிலையபோலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என்றும், காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்றும் இறுதியாக SDPI, PFI என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.



காவல் நிலையத்திற்கு வந்த இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,கடிதத்தைஅனுப்பிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...