வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வரும் நபரை நகரமன்ற தலைவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல் நலம் குறித்து விசாரித்த நகர்மன்ற தலைவர், எஸ். அழகு சுந்தரவள்ளி செல்வம் அவருக்கு நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.


கோவை: வால்பாறை அருகேயுள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் 44வது டிவிசன் தேயிலை தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த சின்னமுருகன் (52) என்பவரை சிறுத்தை தாக்கியது.

சிறுத்தை உடல் முழுவதும் நகங்களால் கிரியதால், அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சக உழியர்கள், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று நகர்மன்ற தலைவர், எஸ். அழகு சுந்தரவள்ளி செல்வம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.



சிகிச்சை பெற்று வரும் சின்ன முருகன் உடல்நலம் குறித்து விசாரித்த நகர்மன்ற தலைவர் அவரிடம் நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது, நகரமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், இரா.சே அன்பரசன், ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...