2 கோடி மதிப்பிலான உயர் அழுத்த மின் மாற்றி துவக்க விழா: உதகையில் இனி தடையில்லா மின்சாரம் - வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்

உதகையில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மாநில மின்சாரத்துறை சார்பில் ரூபாய் 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் 10 மெகவாட் மின் உற்பத்தியில் இருந்து 16 மெகவாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்மாற்றி நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


நீலகிரி: சுற்றுலா நகரமான உதகையில் தடையில்லா மின்சாரம் வழங்கிட ரூபாய் 2 கோடியே 15 லட்சம் செலவில் நிறுவப்பட்ட உயர் அழுத்த மின் மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.



பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குன்னூர் அருகே மின்வசதி இல்லாத பழங்குடியின குக்கிராமங்களுக்கு மின் வசதி அமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுலா நகரமான உதகையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மின் பயன்பாடும் அதிகரித்து கொண்டே வருகிறது.



இதனால், உதகையில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மாநில மின்சாரத்துறை சார்பில் ரூபாய் 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் 10 மெகவாட் மின் உற்பத்தியில் இருந்து 16 மெகவாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்மாற்றி நிறுவப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கனமழையின் போது பார்சன்ஸ்வேலி செல்லும் மின் வினியோகம் தடைப்படுவதால், மின் விநியோகத்தை நிலத்திற்கு அடியில் கொண்டு செல்லப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விரைவில் குன்னூர் அருகே உள்ள சேம்பு கரை கிராமத்தில் மின்சார வசதியின்றி வசித்து வரும் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...