பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆட்சியர் சமீரன் ஆறுதல்

ஐயம்பாளையத்தில் இன்று காலை சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.



கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள ஐயம்பாளையத்தில் சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை ஆட்சியர் சமீரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பொள்ளாச்சி அருகே ஐயம்பாளையத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது பேருந்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.



இதில் சரக்கு ஆட்டோவில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



விபத்தில் தனியார் பேருந்து சாலையோர தென்னந்தோப்புக்குள் சென்று கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.



இந்த நிகழ்வின் போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...