ஊட்டி மலைப் பாதைக்கான அதிவேக டீசல் என்ஜின் : மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா

அதிவேக டீசலால் இயக்கப்படும் ஊட்டி மலை ரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என பி.ஜி.மல்லையா தெரிவித்தார்.


நீலகிரி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உருவாக்கப்பட்ட அதிவேக டீசல் மலை ரயில் எஞ்சினை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா, மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட 66-வது டீசல் என்ஜின் மற்றும் நீலகிரி - ஊட்டி மலை ரயில் என்ஜின்களை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

துவக்க விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. பொன்மலை பணிமனை 100 ஆண்டு வரலாற்று சிறப்பு பெற்றுள்ள நிலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் அதிவேக டீசலால் இயக்கப்படும் ஊட்டி மலை ரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த என்ஜினை, தயாரிக்க உழைத்த தொழிலாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'வந்தே பாரத் திட்டம்' தமிழகத்திற்கு வர கொஞ்சம் காலம் ஆகும். அவற்றுக்கு பயன்படும் சில ரயில் பெட்டிகள் தொகுப்பு நடப்பு நிதியாண்டில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் பாரத் கவுரவ் திட்டத்தில், ஏற்கனவே 5 ரயில்கள் இயங்குகின்றன. கூடுதலாக ஒரு ரயில் இந்த மாதத்திலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் 3 ரயில்களும் இயக்கப்படும். இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பணிமனை முதன்மை பொதுமேலாளர் ஷியாம்தார் ராம், துணைப் பொதுமேலாளர் டிஎல் கணேஷ், உள்ளிட்ட ரயில்வே பணிமனை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...