திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் நீலகிரி வருகை திடீர் ஒத்திவைப்பு - தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்

திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நீலகிரிக்கு 2 நாள் பயணமாக வரவிருந்த நிலையில், இந்து அமைப்பினர் போராட இருந்ததால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நீலகிரி: முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நீலகிரிக்கு வரவிருந்த 2 நாள் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுகவின் முப்பெரும் விழா அந்த கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக திமுக முப்பெரும் விழாவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், உதகையில் திமுகவின் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் திமுக துணை பொதுசெயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா கலந்துகொள்ள இருப்பதாக மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து வந்தனர். இதற்காக ஆ.ராசா 2 நாள் பயணமாக நீலகிரி வருவதாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலமாக அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரிக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

நீலகிரி வரும் அவருக்கு வரவேற்பு கொடுக்கவும் கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிலையில் ஆ.ராசா தனது 2 நாள் நீலகிரி சுற்றுப்பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என நீலகிரி மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா, இந்துக்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்றும் அவர் கோவை வழியாக நீலகிரி செல்லும் வழியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஆ.ராசா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...