பி.எஃப்.ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை கண்டித்து, காங்கேயம் அடுத்த சி.டி.சி கார்னர் மற்றும் திருப்பூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
திருப்பூர்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் இரு வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி மத்திய அரசு, அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.

இதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் தலைமையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் காங்கேயம் சாலை சி.டி.சி கார்னர் பகுதியில் பெண்கள் உட்பட இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ,திருப்பூர் ரயில் நிலையத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மாநகரின் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.