வால்பாறையில் 17 யானைகள் அடங்கிய கூட்டம் அட்டகாசம்..! எஸ்டேட் மருத்துவமனை, வீடு, கடையை இடித்து சேதம்

வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 17 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள அமல்தாஸ் என்பவருடைய மளிகை கடையின் ஜன்னல், கதவு போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



கோவை: வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த 17 யானைகள் அங்குள்ள மருத்துவமனை, வீடு, மளிகை கடை உள்ளிட்டவற்றை இடித்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள், மளிகை கடைகள் மற்றும் நியாய விலை கடைகள் போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 17 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள அமல்தாஸ் என்பவருடைய மளிகை கடையின் ஜன்னல், கதவு போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



இதனையடுத்து சரவணன் என்பவரது வீட்டின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள், எஸ்டேட் மருத்துவமனையின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

நேற்று மாலையில் இருந்து தொலைபேசி தொடர்பு செயல்படாமல் இருந்ததால், யானைகள் நடமாட்டத்தை குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தாமதமாக தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...