ஜெயலலிதா - சசிகலா தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முரசொலியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" புத்தகத்தை மக்களுக்கு வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
கோவை: "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை பொதுமக்களுக்கு வழங்கியது குறித்த வழக்கில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற தலைப்பிட்டு முரசொலியில், ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து எழுதி இருந்தார்.
இந்த பிரதியை திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக போடப்பட்ட வழக்கில், திமுக கோவை மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், ஏ.பத்மநாபன், ராஜா, ஆனந்த், சோமசுந்தம் ஆகியோர் உள்ளிட்டோர் கோவை ஜெம் எம் எண் 1 நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி மீண்டும் 3 ந்தேதி அவர்களை ஆஜராக உத்திரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, வழக்கறிஞர்கள் அகஸ்டஸ்,என்.ஆர்.விக்ரம், மருதுபாண்டியன் வினோத்குமார் சின்னத்துரை, அன்பு செழியன், வெங்கடாசலம் விஜயசேகரன் தாமோதரன் மற்றும் லிங்கராஜா ஆகியோர் ஆஜராகினர்.
பகுதிக்கழகச் செயலாளர்கள் வி.ஐ.பதுருதீன், மார்க்கெட் மனோகரன், நாகராஜ், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் டவுன் பா. ஆனந்தன், சாரமேடு பொறியாளர் அணி அமைப்பாளர் நா. பாபு, சபரிகோபால் வட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஹைவேஸ் தண்டபாணி, மற்றும் அக்ரி பாலு, பாலசுப்பிரமணியம், கஸ்தூரி அருண், தினேஸ், சி.என்.வேணுகோபால் உள்ளிட்ட பலர் நீதிமன்றத்திற்கு வந்தனர்.