பல்லடம் அருகே குடியிருப்புக்கு அருகே எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு - 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

குடியிருப்பு பகுதிக்கு அருகில் எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்து பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 6,7,8 மற்றும் 16வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொசவம்பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பல்லடம் நகராட்சியின் 8வது வார்டுக்கு உட்பட்டபச்சாபாளையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதியில்ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பச்சாபாளையம் ஓடையில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 6,7,8 மற்றும் 16வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்து, கொசவம்பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது, எரிவாயு தகன மேடை மாற்று இடத்தில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...