டிக்கெட் தொலைந்ததால் பேருந்தில் பயணிக்க மறுப்பு - இழப்பீடாக ரூ.6,620 வழங்க அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு திருப்பூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தீபா, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு, டிக்கெட் கட்டணம் ரூ.620-ஐ திருப்பி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் முன்பதிவு செய்த டிக்கெட் தொலைந்து விட்டதால், பயணியை பேருந்தில் ஏற்ற மறுத்ததால் இழப்பீடு, வழக்கு செலவு மற்றும் டிக்கெட் கட்டணம் என மொத்தம் ரூ.6,620 வழங்க திருப்பூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அருகேயுள்ள பட்டணம்புதுாரை சேர்ந்தவர் நிவாஷ். இவர், தனது மனைவியுடன், கோவையில் இருந்து புதுச்சேரி செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 620 ரூபாய் கட்டணம் செலுத்தி இரண்டு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.

பயண தேதியான 2017, மார்ச் 28ல், காந்திபுரத்தில் பேருந்தில் ஏற சென்ற போது, முன்பதிவு செய்த டிக்கெட் தொலைந்து விட்டதால், காந்திபுரம் விரைவு பேருந்து நிலையம் மற்றும் டிக்கெட் வழங்கும் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், டிக்கெட் பிரதியை, வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து வைத்து இருந்தார். அதை காட்டி பயணம் செய்ய அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், அசல் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வேறு வழியின்றி, புதிதாக இரண்டு டிக்கெட் எடுத்து அதே பஸ்சில் சென்றுள்ளனர். ஆனால், அவர் முன்பதிவு செய்த இருக்கை, புதுச்சேரி செல்லும் வரை காலியாகவே இருந்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நிவாஷ், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, திருப்பூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தீபா, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு, டிக்கெட் கட்டணம் ரூ.620-ஐ திருப்பி செலுத்த வேண்டும் உத்தரவிட்டார்.

மேலும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, ரூ.5,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.1,000 என மொத்தம் ரூ.6,620 வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...