கோவை சாய்பாபா காலனி அருகே விபத்து: கல்லூரி பேராசிரியையின் கணவர் உயிரிழந்த சோகம்

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (47). இவர் வடகோவை அருகே சாலையை கடக்க முற்பட்ட போது, அவர் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்த் மீது அவ்வழியாக வந்த லாரி ஏரி விபத்து ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த் -ஜெய் ஸ்ரீ தம்பதி. இதில், ஜெய் ஸ்ரீ (38), மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெண்கள் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராகவேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை, ஆனந்த் (47) தனது மனைவி பணிபுரியும் கல்லூரியில் அவரைப் பார்க்க சென்றுள்ளார். அப்போது, வடகோவை-மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முற்பட்டபோது, அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது.

இதில், நிலை தடுமாறி ஆனந்த் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஆனந்த மீது ஏறியது. இதில், படுகாயம் அடைந்த அவரை. உடனே, அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இறந்த ஆனந்தின் மனைவி ஜெய் ஸ்ரீ, கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பைக் ஓட்டி வந்த டி.வி.எஸ். நகரை சேர்ந்த மதன் (25), கவுண்டம்பாளையம், லாரி டிரைவர் மோகன் (24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவியை பார்க்க சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பேராசிரியரின் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...