மேட்டுபாளையம் இந்து அமைப்பு நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு சம்பவம்: இந்து முன்னணி பிரமுகர் உட்பட இருவர் கைது; தனிப்படை போலீசார் நடவடிக்கை.

விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த ஹரிஷ் என்பவரது கார் மீது கல் வீசி தாக்கியுள்ளனர். வழக்கில் தொடர்புடைய ஹரிஹரன் என்பவர் எந்த அமைப்பிலும் இல்லை - எஸ் பி.



கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் செயலாளராகஇருப்பவர் ஹரிஷ். நேற்று,மர்ம நபர்கள் இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட கார் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பினர்.

இது குறித்த வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இரவு 10 மணி அளவில்கோவைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது, இந்து இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த ஹரிஷ் என்பவரின் கார் கல்வீசி தாக்கப்பட்டது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும், சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் கண்டறியப்பட்டு விட்டனர் என தெரிவித்தார்.

அதன்படி, அதே பகுதியை சேர்ந்ததமிழ்செல்வன், ஹரிகரன் என்ற இருவர்கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரும் குற்றவாளிகள் என்பது தெரியவந்ததாகவும் கூறினார்.

விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைப்பது தொடர்பாக ஹரிஷ்க்கும் தமிழ்செல்வனுக்கும்மேற்பட்ட மோதல் காரணமாகவே ஹரிஷ் கார் மீது கல் வீசி தாக்கியுள்ளனர் எனவும் அவர்தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன் இந்து முன்னணி அமைப்பின் உறுப்பினர் எனவும் அவருடன் கைது செய்யப்பட்ட ஹரிகரன் எந்த அமைப்பிலும் இல்லை என்று தெரிவித்த எஸ்.பி, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம்பகுதியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாகவிசாரணை நடைபெற்று வருகிறது எனவும் விரைவில் அது தொடர்பான குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...