கோவை பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி : தமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு..!

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தமிழக கேரள எல்லை பகுதியான நாடுகானி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்கள்மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் எதிரொலியாகதமிழக - கேரளா எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கமாண்டோ படை வீரர்கள், அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டு கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கூடலூர் பகுதியில் உள்ள கேரள எல்லைகளான நாடுகானி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களை விசாரித்து வருகின்றனர்.

ஒரு பேருந்தில், பயணிகளின் உடமைகளை சோதனை செய்தது குறித்து போலீசார் கூறும்போது, கூடலூர் பகுதியில் 3 தாசில்தார்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுழற்சி முறையில் வரும் 30ஆம் தேதி வரை பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது.தொடர்ந்து வாகன சோதனையும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...