25 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: முன்னாள் நிர்வாகிகளின் செயல்பாட்டில் திருப்தியில்லை - மாற்றத்திற்கான அணியினர் பேட்டி

முன்னாள் நிர்வாகிகள் செயல்பாட்டில் திருப்தியில்லாததால், ஏராளமான திருப்பூரில் ஏராளமான தொழில்துறையினர் தொழிலை விட்டு சென்றுவிட்டதாகவும், நலிவடைந்த பின்னலாடை தொழிலை மீண்டும் மீட்டெடுக்கவே தேர்தல் நடத்தப்படுகிறது என மாற்றத்திற்கான அணியினர் தெரிவித்தனர்.


திருப்பூர்: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் 25 ஆண்டுகளுக்கு பின் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் திருப்பூரில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்து வரக்கூடிய சூழ்நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக இந்த சங்கத்திற்கு நியமன அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வந்தது.

ஏற்கனவே இருந்த நிர்வாகிகளின் செயல்பாட்டில் திருப்தி இல்லை எனக்கூறி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஒரு தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள், 2 இணைச் செயலாளர் பதவி, 21 செயற்குழு உறுப்பினருக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தலைவர் பதவி மட்டும் நியமன அடிப்படையில் வைக்கிங் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் மாற்றத்திற்கான அணி என்ற பெயரில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடிய பாலச்சந்தர் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.



பாலசந்தர் தலைமையில் மற்ற பதவிகளுக்கும் மாற்றத்திற்கான அணி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



இந்த அணியினர் திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது, முன்னாள் நிர்வாகிகளின் செயல்பாட்டில் திருப்தி இல்லை. அதன் காரணமாக திருப்பூரில் ஏராளமான தொழில்துறையினர் தொழிலை விட்டு சென்றுள்ளனர். நலிவடைந்த பின்னலாடை தொழிலை மீண்டும் மீட்டெடுக்க தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

தலைவர் பதவி மட்டும் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாற்றத்திற்கான அணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் உறுப்பினர்கள் இருந்த சங்கத்தில் தற்போது இருநூறு பேர் மட்டுமே இருக்கின்றனர். மனுத்தாக்கலுக்கு பின்பு தொழில்துறையினரை சந்தித்ததன் மூலம் தற்போது 450 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று தொழில்துறையினர் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...