ஈஷாவில்‌ சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது நவராத்திரி திருவிழா - தினமும்‌ பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு

நவராத்திரி விழாவின் முதல் நாளையொட்டி ஈஷா மையத்தில் குங்கும அபிஷேகத்தில்‌ லிங்கபைரவி, தேவி துர்கையின்‌ அம்சத்தை குறிக்கும்‌ விதமாக காட்சியளித்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: ஈஷாவில் சிறப்பு பூஜைகளுடன் நவராத்திரி திருவிழா, நேற்று (26.09.2022) முதல் ககோலாகலமாக தொடங்கியது.

ஈஷாவில்‌ உள்ள லிங்க பைரவி தேவியின்‌ எல்லையில்லா அருளையும், சக்தியையும்‌ உணர நவராத்திரி நாட்கள்‌ மிகச்‌ சிறந்த காலக்கட்டமாக உள்ளது. அந்த வகையில்‌, நவராத்திரியின்‌ முதல்‌ நாளான நேற்று லிங்கபைரவி தேவி துர்கையின்‌ அம்சத்தை குறிக்கும்‌ விதமாக குங்கும அபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து, மாலையில்‌ தேவியின்‌ உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நந்தியின்‌ முன்‌ மஹா ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்வில்‌, திரளான பக்தர்கள்‌ பங்கேற்று சாமி தரிசனம்‌ செய்தனர்‌.

இதேபோல்‌, லிங்க பைரவி தேவி செப்‌டம்பர் 29 முதல்‌ அக்‌டோபர் 2ஆம் தேதி வரை லட்சுமியின்‌ அம்சத்தை குறிக்கும்‌ விதமாக மஞ்சள்‌ அபிஷேகத்திலும்‌, அக்‌டோபர் 2 முதல்‌ 4ஆம் தேதி வரை சரஸ்வதியின்‌ அம்சத்தை குறிக்கும்‌ விதமாக சந்தன அபிஷேகத்திலும்‌ காட்சியளிப்பார்‌.

செப்‌டம்பர் 29 மற்றும்‌ அக்டோபர் 2 ஆகிய தேதிகளில்‌ இரவு 7.30 மணிக்கு மஹா ஆரத்தி நடைபெறும்‌.



இதுதவிர, இவ்விழாவை மேலும்‌ சிறப்பிக்கும்‌ விதமாக பாரம்பரிய இசை மற்றும்‌ நடன கலைஞர்களின்‌ கிராமிய கலை நிகழ்ச்சகள்‌ தினமும்‌ மாலை 6.30 மணி முதல்‌ நடைபெறும்‌.



முதல்‌ நாளான நேற்று ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள்‌ 'த்ரிநயணி' என்ற பெயரில்‌ இசை நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...