வால்பாறையில் சிறுத்தை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி காயம் - பொதுமக்கள் அச்சம்..!

வால்பாறை எஸ்டேட் பகுதியில் மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தாக்கியதில், காயமடைந்த நபரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை அருகேயுள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் 44வது தேயிலை தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், இன்று பிற்பகல் உணவுக்கு பின்னர் மீண்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த சின்னமுருகன் (52) என்பவரை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது.



இதில் உடல் முழுவதும் நகங்களால் கிரியதால், அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சக உழியர்கள், காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், வனவிலங்குகள் காட்டு பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க வேண்டும் என வனத்துறைக்கு, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேயிலை தோட்ட தொழிலாளியை சிறுத்தை தாக்கிய சம்பவம் காரணமாக அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...