ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் - கோவையில் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேங்காய் மாலையுடன் கோரிக்கை

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேங்காய் மாலைகளுடன் வந்து கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை தமிழக அரசு உடனே துவங்க வேண்டும் என்று வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: ஆனைமலை-நல்லாறு திட்ட பணிகளை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகளின் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேங்காய் மாலைகளுடன் வந்து கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை தமிழக அரசு உடனே துவங்க வேண்டும் என்று வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோரிக்கைகள்

பரம்பிக்குளம் பாசன திட்டத்திற்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு அநீதி இழைக்க கூடாது. தென்னைக்கு சோதனை, விவசாயிக்கு வேதனை. தேங்காய், மட்டை, காலி தொட்டிக்கும் விவசாயத்துக்கும் போதிய விலை இல்லை. தண்ணீரை தவறாக பயன்படுத்தும் நபர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைக்காலங்களில் நீர் திறப்பு பாசன கால்வாயை தவிர்த்து மற்ற பாசன கால்வாயில் உள்ள குளம், குட்டையை நீர் நிறப்ப ஆவணம் செய்ய வேண்டும்.

தற்போது பிஏபி பாசன நிலங்களில் பல நிலங்கள் தொழிற்சாலைகள் யாவும் காற்றாலைகளாகவும் மாறி உள்ளது. இந்த நிலங்களை, பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலமாக மாற்ற வேண்டும்.



பாசன விவசாயிகள் தென்னை சார்பில் தொழில் புரியும் விவசாயிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தமிழக முதல்வர் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன பகுதி கரையோர விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோயமுத்தூர் மாவட்ட குழுவிலிருந்து சு பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் துணை தலைவர் பெரியசாமி, சூலூர் எம்.எல்.ஏ. கந்தசாமி, பிஏபி கரையோர விவசாயிகள், கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், விவசாய கூட்டமைப்புகள், கொங்கு மண்டலம் மேற்கு பகுதி விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...