வாடிக்கையாளருக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தராத கோவையை சேர்ந்த சுற்றுலா நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம் : திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டு சுற்றுலாவுக்கான முழு கட்டணமாக ரூ.50,000 வசூலித்துவிட்டு, அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ரூ.5,000 அபராதத்துடன், மொத்தமாக ரூ.55,000-யை 3 மாதத்தில் வழங்க சுற்றுலா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.


கோவை: வெளிநாட்டு சுற்றுலாவுக்கான முழு கட்டணத்தை வசூலித்து விட்டு, அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காத கோவையை சேர்ந்த சுற்றுலா நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம் விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையை சேர்ந்தவர் வழக்கறிஞர் மனோகரன். இவர், வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதற்காக கோவையை சேர்ந்த டிராவல்ஸ் ஆஃப் இந்தியா என்ற சுற்றுலா நிறுவனத்தை அணுகியுள்ளார். பின்னர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், சுற்றுலாவுக்கான முழு கட்டணமான, ரூ.50,000 வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் மனோகரன், வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற நிலையில், அவருக்கு உரிய அடிப்படை வசதிகளை கூட சமந்தப்பட்ட சுற்றுலா நிறுவனம் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளர், நஷ்ட ஈடு கேட்டு, சுற்றுலா நிறுவனம் மீது திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தீபா, பாஸ்கர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த திருப்பூர் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள், மனுதாரரின் மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாடுகளுக்கு அபராதமாக ரூ.5,000 உடன் சுற்றுலாவுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணமான ரூ.50,000-யும் மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என சுற்றுலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

மேலும், 3 மாதங்களுக்குள் வழங்க முடியாவிட்டால், தீர்ப்பு வெளியாகும் தேதி முதல் 6 சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...