டி.டி.எஃப்.வாசன் வழக்கு: போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குக்காக மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்

கோவை - பாலக்காடு சாலையில், அதிவேகமாக, ஆபத்தான முறையில் பயணித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மதுக்கரை நீதிமன்றத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் டிடிஎஃப் வாசன் சரணடைந்த நிலையில், 2 பேர் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


கோவை: பிரபல பைக்கரும், யூடியூபருமான டிடிஎஃப் வாசன் இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் அதிவேகமாக இயக்கிய புகாரில் நேற்று காலை நீதிமன்றமன்றத்தில் சரணடைந்த நிலையில் மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்தவர் பைக்கர் டிடிஎஃப் வாசன். இவர் தனது பைக்கை வேகமாக ஓட்டுவதன் மூலமாகவே தற்போதைய இளைஞர்களிடையே பிரபலமானவர். இவரது யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வைகளை வெகு விரைவாக கடக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் டிடிஎஃப் வாசன் தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இதன் காரணமாக டிடிஎஃப் வாசன் தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களின் பரவின.



இதனிடையே, கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி டிக்டாக் மூலம் பிரபலமான யூடியூபர் ஜி.பி.முத்துவை, டிடிஎஃப் வாசன் தனது பைக்கில் பின்னால் ஏற்றிக்கொண்டு, கோவை பாலக்காடு சாலையில் 150 கிலோ மீட்டர் வேகத்தில், அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் விதமாக பயணித்தார்.



அப்போது, பின்னால் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து, ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பைக்கை வேகமாக இயக்கியதை வீடியோ பதிவு செய்து, டிடிஎஃப் வாசன் தனது Twin Thorttlers என்ற யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு, டிடிஎஃப் வாசன் மீது, போத்தனூர் காவல் நிலையத்தில் 279, 184 MV act மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் டி.டி.எஃப்.வாசனை தேடி வந்த நிலையில், நேற்று (26.09.2022) டி.டி.எஃப்.வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன் மாலை 5.30 வரை நீதிமன்ற கூட்டில் அமர்ந்திருந்தார். இதையடுத்து இரண்டு நபர்கள் உத்தரவாதம் அளித்த பின் மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் டிடிஎஃப் வாசன், நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், சூலூர் வழக்கு தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை அவர் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...