ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல் - ஆளுநர் ஒப்புதலுடன் விரைவில் நடைமுறைக்கும் வரும் என எதிர்பார்ப்பு

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் அறிக்கையின்படி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு தயார் செய்யப்பட்ட அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் ஆளுநர் ஒப்புதல் பெற்று விரைவில் நடைமுறைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவானது கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தங்களது ஆய்வறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில், அமைச்சரவையின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதனையடுத்து, பள்ளி மாணவர்களிடம் ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து, பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு மற்றும் பொது மக்களிடம் இ - மெயில் வழியே பெறப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் கடந்த ஆகஸ்டு 29ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில், அவசர சட்டத்தை மேலும் செம்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செம்மைப்படுத்தப்பட்ட அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று (26.09.2022) நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம், அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த அவசர சட்டத்துக்கு, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரும் என உள்துறை செயலர் பணீந்தர ரெட்டி தெரிவித்துள்ளார்.

கூட்டம் நிறைவடையும் நேரத்தில், அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், சர்ச்சைக்குரிய முறையில் பேசுவதை தவிர்க்கும்படி, அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...