கோவை குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு

வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் மூடப்பட்ட கோவை குற்றாலம், இன்று முதல் (செப் 27) சுற்றுலாவிற்கு திறக்கப்படுவதாக கோவை வனத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தொடர் மழை முடிந்து, நீர்வரத்து குறைந்துள்ளதால் கோவை குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று, செப் 27-ம் முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அருவிகளில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கபடுவது வழக்கம்.

அதேபோல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது .

இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால், கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, காலை, 10:00 முதல் 11:00 மணி, காலை, 11:30 முதல் மதியம், 12:30 மணி, மற்றும் மதியம், 1:00 முதல் 2:00 மணி வரை என, நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று அட்டவணைகளின்படி, அனுமதி அளிக்கப்படும்.

காலை, 10:00 மணிக்கு அனுமதி சீட்டு பெற்று, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மதியம், 1:00 மணிக்குள் வெளியேற வேண்டும்

இவ்வாறு வனத்துறை தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...