ஹலோ, நான் ஐஏஎஸ் அதிகாரி பேசுறேன்..? அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து நூதன மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபர் கைது..!

நடப்பில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி மாறுதல் பெற்று வெளியூர் சென்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயரை சொல்லி அவர்களை போல ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றி வந்த திருப்பூரை சேர்ந்த முகமது அல் அமீன் என்ற நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: ஏமாறுபவர்கள், ஏமாற்றுபவர்ககளுக்கும் நம் நாட்டில் பஞ்சமே இருந்ததில்லை. போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என்று நாள்தோறும் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியம் இருந்துகொண்டே இருக்கிறது. சந்தைகளில் போலி பொருட்கள் விற்கப்படும் மோசடிகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் போலி நபர்கள் நடத்தும் மோசடிகளால் மக்கள் இழக்கும் பணம் மற்றும் நிம்மதி அளவிட முடியாதது.

மக்களை முட்டாளாக்கி நூதன வழிகளில் ஏமாற்றி வந்தாலும், 'பல நாள் திருடன், ஒரு நாள் அகப்படுவான்' என்ற வாசகத்துக்கு ஏற்ப கோவையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

கல்லூரி சீட் மோசடி

கோவையை சார்ந்த நபர் ஒருவர் தன் மகனுக்கு ஒரு தனியார் கல்லூரியில் படிக்க இடம் கேட்டு திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் அணுகியுள்ளார்.

அந்த நபர் தான் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி என்றும் 6 லட்சம் கொடுத்தால் உடனே சீட்டு வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டு முன் பணமாக ரூ.50 ஆயிரம் வாங்கியுள்ளார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் போக்குவரத்து அதிகாரியிடம் அமைச்சர் பேசுவது போல கோல்மால் செய்யும் சந்தனத்தை போலவே, இந்த நபரும் பணம் கொடுத்தவர் நம்ப வேண்டும் என்பதற்காக ஒரு தனியார் கல்லூரிக்கு அலைபேசியில் அழைத்து, தற்போது உண்மையிலேயே பணியாற்றும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பெயரை சொல்லி அவர் போலவே பேசி இருக்கிறார்.

உஷாரான கல்லூரி, சைபர் கிரைம் போலீசாருக்கு அழைப்பு.

ஆனால், அவர் பேச்சு நடையில் எள்ளளவும் நம்பிக்கையில்லாத கல்லூரி நிர்வாகத்தினர் அவரை அதிகாரி என்று ஏற்க மறுத்தது மட்டுமின்றி சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அந்த நபர் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிட்டி சைபர் கிரைம் போலீசார், சம்பந்தப்பட்ட நபரை தேடி பிடித்து கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

திடுக்கிடும் உண்மைகள் - போட்ட வேஷங்கள்.

முகமது அல் அமீன் என்ற திருப்பூரை சேர்ந்த அந்த நபர் சதுரங்க வேட்டை பட பாணியில் ஊருக்கு ஒரு பெயரை சொல்லி நூதன முறையில் பலரிடம் பணம் பறித்துள்ளார்.

அவர் ஒரு போதும் தனது உண்மையான பெயரில் மோசடியில் ஈடுபட்டது இல்லை. நடப்பில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயரை சொல்லி அவர்களை போல ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றி வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி பணி மாறுதல் பெற்று வெளியூர் சென்ற ஐஏஎஸ் அதிகாரிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என அரசு உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி பல நூதன மோசடிகளை அரங்கேற்றியிருக்கின்றார்.

அதாவது அலைபேசியில் உயர் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அல்லது நீதிபதிகள் பெயரை சொல்லி அவர்கள் பேசுவது போலவே பேசி எதிர் தரப்பினரை நம்ப வைத்து, பின்பு தான் ஒரு நபரை அனுப்புவதாகவும், அவருக்கு கேட்கும் உதவிகளை, வேலைகளை செய்து தருமாறு தெரிவித்திருக்கின்றார்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

"பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்பது போல கோவை தனியார் கல்லூரியில் மோசடியில் ஈடுபடும் போது அவர் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஏற்கனவே சென்னை, சேலம் மாவட்டங்களில் இது போன்று நூதன மோசடிகளை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சென்னை வேப்பேரியிலும், சேலம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனிலும் இவர் மீது வழக்குகள் நடந்து வருகின்றன.



உண்மையாகவே, பணியாற்றும் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் பெயரைச் சொல்லி அவர்கள் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியை அரங்கேற்றிய ஆசாமி மீது தகவல் தொழில்நுட்ப பிரிவு 66 டி, ஐபிசி 419, 420 குற்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்த சிட்டி சைபர் கிரைம் போலீசார், அமீனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றார்.

போலி மருத்துவர், போலி என்ஜினீயர், என தன்னை உருவகப்படுத்தி கொண்டு உலா வரும் நபர்களுக்கு இடையில், நடப்பில் பணியாற்றும் உயர் அரசு அதிகாரிகளின் போர்வையில் அரங்கேற்றிய இந்த சம்பவம், ''வெளுத்ததெல்லாம் பால்' என்ற எண்ணத்தை மாற்றி, மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...