மேட்டுப்பாளையம் அருகே வாழை, அவரை பயிர்களை சேதப்படுத்திய யானை, மான்கள் கூட்டம் - தலா ரூ.30,000 இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை..!

ஆதிமதையனூர் கிராமத்தில் மான்கள் மற்றும் யானைக் கூட்டம் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் அவரை பயிர்களை சேதப்படுத்தியதால் வேதனையில் உள்ள விவசாயிகள் தங்களுக்கு தலா ரூ.30,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காடு அருகே உள்ளது ஆதிமதையனூர் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

அடர்ந்த வனத்தையொட்டி இருக்கும் இந்த கிராமத்தில் அடிக்கடி சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருகின்றன. அவ்வாறு வரும் வனவிலங்குகள் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் உள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருவதும் தொடர் கதையாக உள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக இந்த பகுதியில் 8 காட்டு யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்து வருகிறது. இந்த யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆதிமதையனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யாசாமி, செந்தில்குமார், ஸ்ரீதர், சுலோச்சனா ஆகியோர் அப்பகுதியில் உள்ள தங்களது விளைநிலங்களில் வாழை பயிரிட்டுள்ளனர். நேற்று இரவு இந்த விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கு பயிரிடப்பட்டிருந்த 1000-கும் மேற்பட்ட வாழை பயிர்களை தின்றும், பிடுங்கி எறிந்தும் சேதப்படுத்தியுள்ளன.

இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார், ராமசாமி, கிருஷ்ணசாமி, தம்பு, ராஜேந்திரன் ஆகியோரின் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அவரை மொச்சை பயிர்களை மான்கள் கூட்டம் சேதப்படுத்தியுள்ளன.

இதனால் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் சுமார் 30 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், வனத்துறையினர் தங்கள் பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றும், சேதம் அடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...