கருமத்தம்பட்டி அருகே கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு குவியும் பாராட்டுகள்..!

கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் பகுதியில் கர்ப்பிணியின் பாதுகாப்பை கருதி வீட்டிலேயே பிரசவம் பார்த்து தாய் சேய் இருவரையும் காப்பாற்றிய மருத்துவ குழுவை சேர்ந்த முருகன் மற்றும் பாண்டி என இருவருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.


கோவை: கருமத்தம்பட்டி அருகே பனிக்குடம் உடைந்து வலியில் தவித்து வந்த கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் கைலாஷ் - பேபி தேவி தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான பேபிதேவிக்கு, நேற்றிரவு வீட்டில் பனிக்குடம் உடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் பிரசவ வலியில் துடித்துள்ளார்.

இந்நிலையில், அவரது கணவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் விரைந்து வந்துள்ளது. அப்போது, ஆம்புலன்சில் இருந்த மருத்துவர் மற்றும் உதவியாளர் அப்பெண்ணை பரிசோதித்து பார்க்கையில், பேபிதேவிக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது ஆபத்து என கருதிய ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முருகன் மற்றும் உதவியாளர் பைலட் பாண்டி உதவியுடன் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.

இதில், அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாய், சேய் என இருவரையும் சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று சேர்த்தனர். தாய் மற்றும் சேயை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவசரம் மற்றும் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...