புல்லுக்காடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த காய்கறி வியாபாரி மற்றும் சி.எம்.சி. காலனியை சேர்ந்த நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: உக்கடம் அருகேயுள்ள புல்லுக்காடு பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உக்கடம் அடுத்த புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரசகிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், போலீசார் அப்பகுதி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பெரியக்கடை வீதி காவல் நிலைய, துணை ஆய்வாளர் கோமதி தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில், புல்லுக்காடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த காய்கறி வியாபாரி நவுபல் ரகுமான் (20) மற்றும் சி.எம்.சி. காலனியை சேர்ந்த சூர்யா (18) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ரூ.3,100 ரொக்கம் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.