குருவிக்காரன் சமூகத்திற்கு குறவன் என்ற பெயரை சூட்டியது வரலாற்று பிழை - அடையாள ஆவணங்களை ஒப்படைத்து போராட்டம்..!

வட மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு குடிப்பெயர்ந்த வாக்ரி மொழி பேசக்கூடிய 'நக்கலே' என்ற குருவிக்காரன் சமுதாயத்தை குறவன் சமுதாயத்தில் சேர்க்கப்பட்டதை கண்டித்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் போராட்டம்.


திருப்பூர்: குருவிக்காரன் சமூகத்திற்கு குறவர் சமூகம் என்ற பெயரை வைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அடையாள ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு குடிப்பெயர்ந்த வாக்ரி மொழி பேசக்கூடிய "நக்கலே" என்ற குருவிக்காரன் சமுதாயத்திற்கு மத்திய அரசும், தமிழக அரசும் தாய்குடி பெயரான குறவன் என்ற பெயரை சூட்டியது.



இதன்மூலம் வரலாற்று பிழையை ஏற்படுத்தி விட்டதாக கூறி, குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்து நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும், தமிழ் குறவர்களை பழங்குடியினர், எஸ்.டி பட்டியலில் சேர்த்திட மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர், தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...