திருப்பூரில் கோவில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்கள் - போலீசார் தீவிர விசாரணை.

வெடத்தலாங்காடு பகுதியில் உள்ள செல்வ கணபதி கோவிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாததன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியதாகவும், மதில் சுவரை ஏறி குதித்து மர்ம நபர்கள், உண்டியலை திருடிச் சென்று இருக்கலாம் என போலீசார் தகவல்








திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கருவம்பாளைம் அருகே செல்வகணபதி கோவில் உண்டியலை மர்ம நபர்கள்திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருவம்பாளையம் அருகேயுள்ள வெடத்தலாங்காடு பகுதியில்ஸ்ரீ செல்வ கணபதிகோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணியாற்றி வரும் கோபிநாத் என்பவர் நேற்றிரவு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் கோவிலை திறந்து பார்த்த போது கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்த பழனிச்சாமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து விரைந்து சென்ற திருப்பூர் மத்திய போலீசார், உண்டியல் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கோவில் உண்டியலில் 10 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும், கோவிலில்சிசிடிவி கேமரா பொருத்தப்படாததன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியதாகவும், மதில் சுவரை ஏறி குதித்து மர்ம நபர்கள், உண்டியலைதிருடிச் சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...