மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 ஆம் வகுப்பு புத்தகத்தில் வர்ணாசிரம முறைகள் என்ற தலைப்பில் சாதிய வேறுபாடுகளை கற்பிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க வினர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சாதி பாகுபாடு கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பாட நகலை கிளித்தெரிந்து ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வர்ணாசிரம முறைகள் என்ற தலைப்பில் சாதிய வேறுபாடுகளை கற்பித்தும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் எனவும் பிளவுபடுத்தி பாடம் கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடை கற்பிப்பதற்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்
இதைத்தொடர்ந்து இன்று சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சாதி பாகுபாடு கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வர்ணாசிரமம் பாடம் இடம் பெற்று இருக்கும் பாடப்பிரிவு நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாதி வேறுபாடுகளை பற்பித்து சூத்திரர்கள், பஞ்சமர்கள் என இழிவுபடுத்தும் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவ்வமைப்பினர் 15 பேரைமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச் செயலாளருக்கு கு.ராமகிருஷ்ணன் :
சிபிஎஸ்சி பள்ளிகளில் வர்ணாசிரம முறை என்ற பெயரில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பிராமணர், சூத்திரர் என்பவர்கள் யார் என்பதை வகைப்படுத்தி மாணவர்கள் மத்தியில் சாதி வெறியை தூண்டி வருகின்றனர்.
அதேபோல, தலித்துகள் இறந்த விலங்குகளை அறுப்பதும் உண்பதும் தான் என பாடத்திட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
கோவை வரும் பாஜக மாநில தலைவர்அண்ணாமலை முதலில் இந்த பாடத்திட்டத்தை நீக்க போராட்டம் நடத்தட்டும். இதை கேட்க முடியாத அண்ணாமலை ஆ.ராசா கருத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதா? என கேள்வி எழுப்பினார்.
எனவே, உடனடியாக மத்திய அரசு அந்தப் பாடத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.