கோவையில் நடைபெற்ற இரட்டையர் பேட்மிண்டன் போட்டி - வெற்றி பெற்று முதல் பரிசை வென்ற கேரளா கிளப் அணி..!

கடந்த 15 நாட்களாக கோவை கேரளா கிளப்பில் நடந்து வந்த மாநகர காவல் துறை, ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரித்துறை ஊழியர்களுக்கான பேட்மிண்டன் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆட்சியர் சமீரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்று வந்த அரசுத் துறை ஊழியர்களுக்கான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் கேரளா கிளப் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.



அல்ட்ரா ரெடி மிக்ஸ் கான்க்ரீட் நிறுவனம் சார்பில் கோவையில் கடந்த 15 நாட்களாக அரசுத்துறை ஊழியர்களுக்கான இரட்டையர் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த போட்டிகளில், கோவை மாநகர காவல் துறையினர், ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரித்துறையினர், அச்சு மற்றும் ஊடகத்துறையினர் மற்றும் கேரளா கிளப்பைசேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கேரளா கிளப்பின் பிரபாகரன்/பாலாஜி ஜோடி சிறப்பாக விளையாடி முதல் பரிசை வென்றது.

இரண்டாம் பரிசை கேரளா கிளப்பின் கோகுல்/சரவணன் ஜோடியும், மூன்றாம் பரிசை காவல் துறையை சேர்ந்த அருணகிரி/மணிகண்டன் ஜோடியும், நான்காவது பரிசை கேரளா கிளப்பின் தங்கவேலு மற்றும் சிவா ஜோடி கைப்பற்றியது.

இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை அல்ட்ரா ரெடி மிக்ஸ் கான்கிரீட் நிறுவனத்தின் தலைவர் சிவசாமி, கேரளா கிளப்பின் தலைவர் அசோக் செயலர் ராஜ்குமார் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கினார்.



பொதுமக்கள் நலனுக்காக செயல்படும் மாநகர காவல் துறையினர், ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரித்துறையினர், அச்சு மற்றும் ஊடகத்துறையினர் மற்றும் கேரளா கிளப் உறுப்பினர்கள் ஆகியோருக்குள் நல்ல அறிமுகம் மற்றும் உறவு இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டிகள் கோவை கேரளா கிளப்பில் நடைபெற்றது.

விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த இரட்டையர் பேட்மிண்டன் போட்டியை நடத்துவதன் மூலமாக மக்களுக்கு சேவை செய்யும் பல துறையினர்களை ஒருங்கிணைத்துள்ளதற்கு பாராட்டுகள்.

கேரளா கிளப் என்பது மலையாளி மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்காகவும் செயல்பட்டு வருவதற்கு பாராட்டுக்கள்

இந்த 15 நாட்கள் போட்டி நடைபெறுவதற்கு முழு உறுதுணையாக இருந்து செயல்பட்ட அல்ட்ரா ரெடி மிக்ஸ் கான்க்ரீட் நிறுவனம் அதன் தலைவர் சிவசாமி, மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும்வாழ்த்துக்கள்.

இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...