தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் நடந்த ஆண்டு விழாவில், உடல் உறுப்பு தானம் செய்த சிறந்த ஐந்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை: தானத்தில் சிறந்தது நிதானம் என்பர், அது நாம் சிறப்பாக வாழ்வதற்கு. ஆனால், பிறரை சிறப்பாக வாழ வைப்பதற்கு உடல் உறுப்பு தானம் தான் ஆகச்சிறந்த தானம்.
இறந்த பிறகு மண்ணிலும் நீரிலும் கரைய போகிற உடல் உறுப்பை தானம் செய்வதற்கு இன்றளவும் மக்கள் மத்தியில் தயக்கம் இருந்து வந்தாலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தொடர் விழிப்புணர்வு மூலம் உறுப்பு தானம் செய்ய இன்று பலரும் முன் வருகின்றனர் என்பது பாராட்டுதலுக்குரியது.
சத்தமில்லா சுனாமி போல, உறுப்பு செயலிழப்பு காரணாமாக மட்டுமே இந்தியாவில் 5 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழக்கிறார்கள். அவ்வாறு, உயிர் உறுப்புகள் செயலிழந்து மரணத்தின் விளிம்பில் இருப்போருக்கு, மூளைச் சாவு போன்ற காரணங்களினால் இனி உயிர் பிழைக்க முடியாத நிலையில் உள்ளவர்களின் உறுப்புகள் தானமாக கொடுக்கப்படும் போது, மீண்டும் அவர்கள் பிறக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
அவ்வகையில், உடல் உறுப்பு தானத்தில், சிறந்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கான விருது, கோவை அரசு மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் நடந்த ஆண்டு விழாவில், உடல் உறுப்பு தானம் செய்த சிறந்த ஐந்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கான விருது வழங்கப்பட்டது. இதில், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து டீன் நிர்மலா கூறுகையில், ''கோவை அரசு மருத்துவமனையில், 2019ம் ஆண்டு மூளைச்சாவால் உயிரிழந்த நபரின் உடல் பாகங்கள் மற்றும் இவ்வாண்டு மூன்று பேரின் உடல் பாகங்கள் என, நான்கு முறை உடல் உறுப்பு தானம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், சிறுநீரகம், கண், இருதயம், கல்லீரல் உள்ளிட்ட பாகங்களால், 15-20 நபர்கள் தற்போது உயிர் வாழ்ந்து வருகின்றனர்,'' என்றார்.
மூளை சாவு அடைந்த ஒரு நபரால், உறுப்பு செயலிழப்பால்உயிருக்கு போராடி வருகிற 8 நபருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. எரியப்போகும் உறுப்பை கொடுத்து அணையப்போகும் உயிரை காத்தல் என்பது வாழ்நாளில் ஒருவர் செய்யத்தக்க மிக உன்னதமான செயலாகும்.